Our Feeds


Tuesday, October 11, 2022

ShortNews Admin

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான வர்த்தமானி.



புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, அதிவிசேட வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் வரும் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைத்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 203.) பிரிவு 44, 123, 124, 125, 126, 126B, 128, 132, 132 A மற்றும் 231 உடன் படிக்கப்பட்ட பிரிவு 237 இன் கீழ் விதிமுறைகளை திருத்தியுள்ளார்.

இதன் கீழ், 2009 மார்ச் 26 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2009 ஆம் ஆண்டின் இலக்கம் 01 ஆம் இலக்க சாரதி அனுமதிப்பத்திர ஒழுங்குமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

புதிய அதிவிசேட வர்த்தமானியின்  அடிப்படையில், ஒரு வகுப்பிற்கான கற்றல் அனுமதி மற்றும் புதிய ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்ப கட்டணம், சாதாரண சேவையின் கீழ் 2,500 ரூபா, ஒரு நாள் சேவையின்  கீழ்  3,500. ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ் கட்டணம் 3,000  ரூபா மற்றும் ஒரே நாள் சேவைக்கு 4,000 ரூபாவாக அறவிடப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »