பாடசாலை மாணவி ஒருவரை பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்தார் எனக் கூறப்படும் இராணுவ சிப்பாய் உட்பட மூவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அநுராதபுரம் மாவட்டத்தின் கவரகுள்ளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் தண்ணீர் அருந்துவதற்காக சந்தேகத்துக்குரிய இராணுவ சிப்பாயின் வீட்டுக்குச் சென்றபோதே தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படதாக சிறுமியின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
பின்னர், அதே பகுதியில் வசிக்கும் 28 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள் குறித்த மாணவியை பல சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன் நபர்களில் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிய வந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்னர்.