இவ்வாறான நிலையில் எதிர்கால செயற்பாடுகளுக்கு எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள முடியும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (07) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதை சாதாரனமாக எடுத்துக் கொள்ள முடியாது. இம்முறை பெரும்பாலான ஆசிய நாடுகளான இந்தோனேஷியா,மலேஷியா ஆகியவை கூட இலங்கைக்கு ஆதரவு வழங்கவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,பொருத்தமான பாதுகாப்புசார் சட்டத்தை இயற்றும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கமைய சர்வதேசத்தக்கு வாக்குறுதி வழங்கினேன்.
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் வெளிப்படையாகவே மீறியுள்ள நிலையில் எதிர்கால செயற்பாடுகளுக்கு எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை எவ்வாறு வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.