துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதி திரு மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த தயாசிறி ஜயசேகரவின் சார்பில் சட்டத்தரணி எவரும் ஆஜராகவில்லை.
இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி உண்மைகளை முன்வைக்குமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.