நாடு முழுவதும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.2021ம் ஆண்டு 1405 வாகனங்கள் திருடப்பட்டிருந்ததுடன், 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலம் வரை 1406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
வாகன உரிமையாளர்களின் கவனயீனம் காரணமாகவே இந்த வாகன திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்.