அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எமது அணி ஆதரவு வழங்கும். அதேபோல இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் யோசனையை நீக்க மொட்டு கட்சி முற்பட்டால் அந்த முயற்சியையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளும்னற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசியல்வாதிகளும் பொறுப்பு கூறவேண்டும் அந்தவகையில் . நானும் தற்போது சாட்சி கூண்டில்தான் நிற்கின்றேன்
எமது நாடு சுதந்திரமடைந்து 74 வருடங்கள் ஆகின்ற போதும் 64 ஆண்டுகள் இந்நாட்டை நான்கு குடும்பங்களே ஆட்சி புரிந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்கள் இனம், மதம், மொழி மற்றும் போர் ஆகியவற்றை விற்றனர்.
எனவே, இனியும் குடும்ப ஆட்சி பின்னால் அணிதிரள நாம் தயாரில்லை. இடம்பெற்ற தவறை திருத்திக்கொள்வதற்காகவே நான் தற்போது அரசியல் தலைமைத்துவம் வழங்கிவருகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.