முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த எரிபொருள் அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.