8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும்
வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கையை அலங்கரித்த இலங்கை கரம் அணியினர் நேற்று (08) இரவு நாட்டை வந்தடைந்தனர்.8 ஆவது உலக சாம்பியன்ஷிப் கரம் போட்டி மலேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இவ்வருடப் போட்டித் தொடரில் இலங்கை ஆடவர் கரம் அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், பெண்கள் அணி 3 ஆவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
அதன்படி, இப்போட்டியில் இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 4 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.