கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை 270 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதே பாணின் விலையை நாங்கள் அதிகரித்தோம்
கோதுமை மாவின் விலை 400 ரூபாவாக உயர்த்தப்பட்ட போதிலும் பாண் இறாத்தல் ஒன்றின் விலை அதிகரிக்கப்படவில்லை.
400 ரூபா என்ற ஒரு கிலோ கிராம் கோதுமைமாவின் விலையை 100 ரூபாவால் குறைப்பதால் பாணின் விலையை குறைக்க முடியாது.
பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் கோதுமை மாவை விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்கள் கோதுமையின் விலையை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்