யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மருந்தகமொன்று,
உரிய நடைமுறைகளை பின்பற்றாமை காரணமாக, அதன் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை, தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை ஆகியவற்றினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மருந்தகங்களுக்கு இடையில் 250 மீட்டர் இடைவெளி காணப்பட வேண்டும் என்பது தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் நியதி என்ற போதிலும், அதனை மீறி செயற்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டட அனுமதியை பெற்று, குடியமர்வு சான்றிதழை பெறாமல், வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக மாநகர சபை, கடிதமொன்றின் ஊடாக உரிமையாளருக்கு அறிவித்துள்ளது.
உரிய நடைமுறைகளை பின்பற்றி, குறித்த மருந்தகம் திறக்கப்படாமையினாலேயே, மருந்தகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மருந்தகத்தின் வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.