மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டதே தாம் செய்த ஒரே தவறு எனவும்,அதன் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டவை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இது தொடர்பான அனைத்துத் திட்டங்களும் நிர்மாணங்களும் அரச நிறுவனங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் மூச்சு,பிரபஞ்சம் மற்றும் பாடசாலைகளுக்கு பேரூந்துகள் என்பன எவ்வாறு வழங்கப்படுகின்றன என சில எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், மனசாட்சியுடனும் பணிபுரியும் எந்தவொரு நபருக்கும் நன்கொடை வழங்கக்கூடிய நன்கொடையாளர்களும் இருப்பதாக அவர் நினைவு கூர்ந்தார்.
ஜனாதிபதி வெளிநாட்டிலிருந்து வந்தவுடனயே உயர் பாதுகாப்பு தொடர்பான வர்த்தமானி மீளப்பெறப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதேபோன்றே பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹினிதும தேர்தல் தொகுதிக் கூட்டம் இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது. ஹினிதும தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பியசேன கமகே இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு,
பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காலாவதியான முறைமைகளிலிருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச சமூகத்துடன் ஈடுபடக்கூடிய இளம் தலைமுறையை உருவாக்குவது அவசியம் எனவும் தெரிவித்தார்.