முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.