எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன தயாராக இருப்பதாகவும், இன்று தேர்தல் நடத்தப்பட்டால் கூட கட்சி வெற்றி பெறும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (16) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஒன்றாக எழுவோம் ’ பிரச்சாரத்தின் கீழ் நடத்தப்பட்ட தொடர் பேரணியின் ஒரு பகுதியாக நாவலப்பிட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது, தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார் .
தாம் தவறு செய்திருந்தாலும் வரலாற்றில் இதற்கு முன்னரும் தவறு செய்தவர்கள் இருந்துள்ளனர் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
"ஏதாவது தவறு நடந்தால், அதை சரிசெய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நாங்கள் வெட்கப்படத் தேவையில்லை."
“எங்களுக்கு எதிராக இந்த நாட்டில் ஒரு பிரிவு இருப்பதை நாங்கள் அறிவோம். தேர்தல் வரும்போது நமக்குத் தெரியும். இன்றும் தேர்தல், பொதுத்தேர்தல் என்றால் வெற்றி பெறுவோம். அதுதான் உண்மை” என்று அவர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, இந்திக்க அனுருத்த, நாமல் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இந்த பொது பேரணியில் கலந்துகொண்டனர்.