தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 80.8 மற்றும் 80.9 கிலோமீற்றர்களுக்கு இடையில் நேற்று (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு கொழும்பு நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்று அதே திசையில் பயணித்த பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உதவியாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லியனகேவத்த அஹங்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பவுசரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.