14 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக அக்குரஸ்ஸ
பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலுக்கு எதிராக 2012ஆம் ஆண்டுதொடரப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சாருவ லியனகேவுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பி.குமாரத்தினம் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளது.