காணாமல் போனதாகக் கூறப்படும் பேராதனைப்
பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார்.குறித்த மாணவர் நேற்று (12) ஆய்வுகளில் பங்கேற்றதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.
பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட சிரேஷ்ட குழுவின் மாணவரான இவர் கடந்த 03ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கடவத்த-கனேமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.