பென் எஸ் பேர்னான்க் (Ben S. Bernanke), டக்ளஸ் டபிள்யூ டயமன்ட் (Douglas W. Diamond) , பிலிப் எச். டைப்விக் (Philip H. Dybvig) ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக சுவீடன் நோபல் பரிசுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை அறிவித்தனர்.
வங்கி மற்றும் நிதியியல் நெருக்கடி குறித்துச் செய்தமைக்காக இவர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
1980 முதல் 1980 களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகியோர் இந்த ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டனர். நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதிலும், நிதி நெருக்கடிகளைக் கையாள்வதிலும் அவர்களின் ஆய்வும், ஆராய்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை என நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் வங்கிகளின் முக்கியத்துவம், குறிப்பாக நிதியியல் நெருக்கடியில் சிக்கியுள்ள போது வங்கிகளின் முக்கியம் ஆகியவற்றையும், வங்கிகள் ஏன் வங்குரோத்தாகக் கூடாது என்பதை இவர்களின் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன என நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.