பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி மற்றும் அவரது காதலன் என கூறப்படும் இசுரு பண்டார ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஸ்கைப் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேக நபர்கள் இருவரும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.