அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமில்லாமல் ஆற்று மணல் ஏற்றிய உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று மற்றும் ஆலீம் நகர் ஆகிய வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து அனுமதிப்பத்திரமில்லாமல் ஆற்று மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
கைப்பற்றப்பட்டிருந்த உழவு இயந்திரங்களுடன் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) ஆஜர்படுத்திய போது இரு வாகன உரிமையாளர்களுக்கும் தலா 50,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
வாகன உரிமையாளரினால் குறித்த தண்டப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் வாகனங்களும் விடுவிக்கப்பட்டது.