Our Feeds


Sunday, October 2, 2022

SHAHNI RAMEES

இந்த அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – ஜீ.எல். பீரிஸ் சூளுரை..!

 38 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம், மற்றுமொரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.





அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த முடியாமல்

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில் அமைச்சர்களுக்கு மட்டும் அரசாங்கம் தன்னிச்சையாக சலுகை வழங்கி வருவதாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 



இந்த நாட்களில் தமது குழுவினர் நாடு முழுவதும் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளதாக பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.



அவர்களின் எதிர்பார்ப்பு அதுவாக இருந்தால், அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமது குழு செயல்படும்,மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித உணர்வும் கொண்டிருக்கவில்லை. மக்களின் விரக்தியும் கோபமும் மிகவும் நியாயமானது என பீரிஸ் கூறியுள்ளார்.




நாடு இவ்வாறானதொரு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது, ​​இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனம், எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், வாகனத்திற்கு 300 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »