Our Feeds


Thursday, October 27, 2022

SHAHNI RAMEES

மது அருந்திவிட்டு திருடச்சென்ற வீட்டிலேயே உறங்கிய இருவர்...! - மடக்கிப் பிடிப்பு!

 

வீடு ஒன்றில் திருடச் சென்ற இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்திய பின்னர் அங்கேயே உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பியோடியுள்ளார். யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் நேற்று (26) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் , செவ்வாய்க்கிழமை வெளியே சென்றிருந்த சமயம் , இரவு நேரம் வீட்டினுள் திருடும் நோக்குடன் இருவர் உள்நுளைந்துள்ளனர்.

வீட்டினுள் திருட சென்றவர்கள் , வீட்டில் மதுபான போத்தல்களை கண்டு , வீட்டில் சமைத்து , மது அருந்தியுள்ளனர்.

மது அருந்தியவர்கள் ,நிறை போதையில் திருட சென்ற வீட்டிலேயே ஆழ்ந்த உறக்கம் கொண்டுள்ளனர்.




காலையில் வீட்டார் வந்து பார்த்தபோது, வீட்டினுள் இருவர் மது அருந்திய நிலையில் உறக்கத்தில் இருப்பதனை கண்ணுற்று , சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

சத்தம் கேட்டு எழுந்த திருடர்கள் இருவரும் வீட்டிலிருந்து தப்பியோடியுள்ளனர். தப்பி ஓடியவர்களை அயலவர்கள் துரத்தி சென்றபோது ஒருவர் அகப்பட்டுக் கொண்டார். மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார். மடக்கி பிடிக்கப்பட்டவரை வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைகளின்போது குறித்த நபர் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவருடன் கூட வந்தவர் மூளாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு ஏற்கனவே நீதிமன்ற பிடியாணை உள்ளதாகவும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »