காலி முகத்திடலில் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் நேற்று (09) மாலை கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான 16 வயது மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏனையவர்கள் தொடர்ந்தும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 09ஆம் திகதி முதல் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்து உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் போராட்டக்கள உறுப்பினர்கள், காலிமுகத்திடலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்விற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதோடு போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.