நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றத்தில்
விவாதிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர், இன்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த தான், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 22ஆவது திருத்தம் வேடிக்கையானது என்று தெரிவித்த கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் பலர் அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கூறினார்.
குழுவாக சேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில், எம்.பிக்களிடம் தெரிவித்துள்ளார்.