இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்
ஸ்டாலின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.நேற்று (09) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரினால் சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அச்சுறுத்தி துன்புறுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் விரைவானதும், விரிவானதுமான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.