பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது காணாமல் போன மாணவன் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் கடவத்த-கனேமுல்ல பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குப் பின்னரான சூழலுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாததாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாததாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகாத வகையில் பாடப்பிரிவுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.