பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி
கட்டணத்தை குறைக்க மாட்டோம் என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும், முச்சக்கர வண்டிக்கான டீசல், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.