இந்த ஆண்டு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி
பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.விடைத் தாள்களை திருத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் கடந்த மே மாதம் சாதாரண தர பரீட்சைகள் 3,844 மத்திய நிலையங்களில் நடைபெற்ற நிலையில், இந்த பரீட்சைகளுக்காக 517,486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவ்வாறு பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 407,127 பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 590 பரீட்சார்த்திகள் விசேட தேவையுடைவர்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.