டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது
என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 வீதம் அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும் எனவும், 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இது 4 வீதத்தை விட குறைவானது எனவும் அவர் தெரிவித்தார்.