கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியைப் போன்று புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தையும் மீளப்பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாராளுமன்றம் உட்பட பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஜனாதிபதி இரத்துச் செய்தார்.
இந்நிலையில் ஜளாதபதியின் குறித்த செய்ற்பாட்டை பாராட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அவ்வாறான எல்லை நிர்ணயம் முற்றிலும் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி உடனடியாக திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்தே கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியைப் போன்று புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தையும் மீளப்பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.