பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.கத்தார் எயார்வேஸ் விமானமொன்றின் மூலம் வெளிநாடு செல்வற்காக அவர் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.
எனினும், நீதிமன்றத்திலுள்ள வழக்குகளில், அவர் வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டைவிட்டு அவர் வெளியேறுவதற்கு குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.