ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த
வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற குழு கூட்டத்தையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர, 21வது அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.