கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுஜீவ தம்மிக்க தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கின்றமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், முட்டை விலையையும் குறைப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எரிபொருள் விலை படிப்படியாக குறைகின்றமையும், இந்த விலை குறைப்புக்கான காரணம் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுஜீவ தம்மிக்க தெரிவிக்கின்றார்.