Our Feeds


Sunday, October 23, 2022

SHAHNI RAMEES

அயர்லாந்து அணியை அபாரமாக வெற்றி கொண்ட இலங்கை...!



இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் அயர்லாந்து

அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கட்டுக்களால் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.


போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


இதனையடுத்து, 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.


இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து இலங்கையின்வெற்றியை உறுதி செய்தார்.


இந்த வெற்றியின் ஊடாக இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »