பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்
சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் உட்பட 8 பேரும் இன்று புதன்கிழமை (19) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமாக ஒன்றுகூடல், சட்டத்திற்குப் புறம்பாக ஒன்றுகூடல் மற்றும் அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறியமை ஆகிய காரணங்களுக்காக குறித்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
களனி பல்கலைக்கழகத்தில் இருந்து 6 மணித்தியாலத்திற்கு முன் அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி கொழும்பு – கண்டி பிரதான வீதியை பொலிசார் மறித்து ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுப்பதைத் தடுத்தனர்.
இதையடுத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பிக்கு ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.