‘பொடி மைனா’ (சின்ன மைனா) என தான் அழைக்கப்படுவதில் மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இணையத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் தன்னை ‘பொடி மைனா’ என்றும் மக்கள் விமர்சிப்பதாகவும், மஹிந்த ராஜபக்சவின் மகனாக தன்னை மக்கள் ஏற்றுக்கொண்டதால், தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“2005ஆம் ஆண்டு 5 வீதமானோருக்கு மட்டுமே இணையம் இருந்தது. மகிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்கின்றனர்”.
“ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகிற்கு விசுவாசமாக இல்லை. அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“கோட்டாபய ராஜபக்ஷ மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க – காலி முகத்திடல் போராட்டத்தைத் துடைத்தெறிந்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.