குருணாகல் மாவட்டத்தின் வலக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பெண்ணும் அவரின் மகனும் உயிரிழந்துள்ளனர்.
42 வயதான ஒரு பெண்ணும் 18 வயதான அவரின் மகனுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – குருணாகல் வீதியில் டிப்பர் லொறி ஒன்றும், முச்சக்கர வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதால் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வாகனத்தை செலுத்திய பெண்ணின் கணவரும், மற்றொரு மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.