பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அர்ஷாத் ஷெரீப் எனும் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கென்ய பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான அர்ஷாத் ஷெரீப், அந்நாட்டு இராணுவத்தை விமர்சித்து வந்தார்.
தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக அவர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொலிஸார் நடத்தியதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என கென்யாவின் பொலிஸாரை மேற்பார்வை செய்யும் சுயாதீன அமைப்பின் தலைவர் ஆன் மெகோரி தெரிவித்துள்ளார்.