நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3 ஆவது மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் (நேற்று) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (07) வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்தியதால் கடந்த இரண்டு மாதகாலமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
3ஆவது மசகு எண்ணெய் கப்பல் நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு டொலர் செலுத்துவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் துரதிஸ்டவசமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.