Our Feeds


Wednesday, October 26, 2022

ShortNews Admin

இந்திய முஸ்லிம்களை தொடர்ந்தும் நசுக்கும் மோடி அரசு - தேவ்பந்த் பல்கலைக் கழகத்தை சட்டவிரோத பட்டியலில் இணைத்தது.



உத்தரப் பிரதேச  மாநில  பாஜக அரசு தனது சிறுபான்மை விரோத நடவடிக்கைகளின்  தொடர்ச்சியாக உலகப் புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா பல்கலைக்கழகத்தை சட்ட விரோதப்  பட்டியலில் அறிவித்திருக்கிறது.


உ.பி. மாநில மதரஸா கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என இதற்கு காரணம் கூறப்பட்டிருக்கிறது.


1867 ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு குர்ஆன் மற்றும் ஆன்மீக வழிகாட்டல்களை பயிற்றுவிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்ததும், இந்திய விடுதலைக்கு துணை நின்றதும் வரலாறாகும்.


இதில் உருவான மாணவர்கள் தேச விடுதலையில் தங்களை அர்ப்பணித்து தியாகம் புரிந்துள்ளனர்.


இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு தந்திருக்கும் வழிகாட்டலில் இயங்கி வரும் ஒரு ஆன்மீக அறிவாலயத்தை முடக்குவது என்பது மதவெறி மன நோயின் உச்சமாகும்.


உ.பி. மாநில அரசுக்கு நல்லெண்ண பார்வை இருந்திருக்குமாயின் , அதன் நிர்வாகிகளை நேரில் அழைத்து உரையாடியிருக்கலாம். அரசின்  வழிகாட்டல்களை எடுத்துரைத்திருக்கலாம்.


ஆனால் சட்ட விரோதப் பட்டியலில் உலகப் புகழ் பெற்ற ஒரு மதரஸா பல்கலைக்கழகத்தை இணைத்திருப்பது குறுகிய நோக்கமுடையதாகும்.


 நாடு பாராளுமன்ற தேர்தலை  எதிர்கொண்டிருக்கும்  நிலையில், அம்மாநிலத்தில் எதிர் மனநிலையை உருவாக்கி, வாக்குகளை அணி திரட்டுவதே இதன் உள்நோக்கமாக தெரிகிறது.


எனவே அரசியல் சாசன சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு தந்திருக்கும் வழிகாட்டலில்,தேசப் பற்று, சமூக இணக்கம், பொது அமைதி ஆகியவற்றை கொள்கைகளாக கொண்டு இயங்கும் தாருல் தேவ்பந்த் மதரஸா பல்கலைக்கழகத்தை  சட்டவிரோத  பட்டியலிருந்து விடுவித்திட வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.


இவண்,

மு. தமிமுன் அன்சாரி,

பொதுச் செயலாளர்,

மனிதநேய ஜனநாயக கட்சி,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »