காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5 – 3.0 மீ) மற்றும் பலத்த காற்று அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமையினால் , மேற்கண்ட கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.0 – 2.5 மீ) மற்றும் பலத்த காற்று அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே மேற்கண்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், காலியிலிருந்து கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.