வெளிநாடு செல்லும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஞ்ஜன் ராமநாயக்கவை மீள திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்ஜன் ராமநாயக்க நேற்று (ஓக்.27) கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாடு செல்ல தயாராகியுள்ளார்.
கட்டுநாயக்காவில் இருந்து கட்டார் வழியாக அமெரிக்கா செல்ல ரஞ்ஜன் ராமநாயக்க முயற்சித்துள்ளார்.
எனினும், நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகளினால் அவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அவரை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.