ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், அனைத்து இரண்டாம் வருட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் மருத்துவ பீடத்தில் நுழைந்த புதிய மாணவர்களை பகிடி வதை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
200க்கும் மேற்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ருஹுனு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹதுகொட தெரிவித்துள்ளார்.