Our Feeds


Sunday, October 23, 2022

Anonymous

`எறும்பா இது; பயங்கரமாக இருக்கே!' - வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி இதுதான்!

 



ராட்சத மிருகத்தைப்போல இருக்கும் சாதாரண கட்டெறும்பின் முகத்தை க்ளோஸ் அப்பில் புகைப்படமெடுத்து காண்போரை மிரளச் செய்திருக்கிறார் புகைப்பட கலைஞர்.


திகில் திரைப்படங்களில் வரும் ராட்சத மிருகத்தைப்போல இருப்பது, சாதாரண கட்டெறும்புதான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா! ஆம், இது சாதாரண கட்டெறும்பின் க்ளோஸ்அப் புகைப்படம் தான்.


பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான `Nikkon', 1975ம் ஆண்டு முதல் `The Nikon Small World Competition' என்ற புகைப்படப் போட்டியை நடத்தி வருகிறது. இதில் புகைப்படக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு `light microscope' போன்ற கேமரா லென்ஸ்களைப் பயன்படுத்தி நுண் உயிர்களை அல்லது மிகச்சிறிய நுண் பொருட்களைப் புதுமையான முறையில் புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்புகின்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த புகைப்படம் மற்றும் சிறந்த புகைப்பட கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறது நிக்கான் நிறுவனம்.


இந்நிலையில் இந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான `The Nikon Small World Competition 2022' போட்டி நடைபெற்றது. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் பல புகைப்படங்கள் போட்டியில் பங்கேற்றன. அதில் `Image of Distinction' என்ற தலைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் லிதுவேனியாவைச் சேர்ந்த யூஜெனிஜஸ் கவாலியாஸ்காஸ் (Eugenijus Kavaliauskas) என்ற புகைப்படக் கலைஞர் `5X -Objective Lens Magnification' என்ற லென்ஸ் மூலம் எடுத்த சாதாரண கட்டெறும்பின் க்ளோஸ்அப் புகைப்படம் தான் இது. இப்புகைப்படம் $35  நிக்கான் பரிசை வென்றது. மேலும், திகில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு பெரிய ராட்சத மிருகத்தைப்போல இருக்கும் இப்புகைப்படம் மக்களிடையே கவனத்தைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நன்றி: ஆனந்த விகடன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »