கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது அல்லது
திறந்த சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை ஆராய்வதற்கு தமக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.அவ்வாறான அதிகாரங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திக ஜி சேனாரத்ன தெரிவித்தார்.
கட்டுப்பாட்டாளரின் அத்தகைய அதிகாரங்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டால், சந்தையில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.