மாற்று வழிகளை வழங்காமல் அதிகாரிகள் மற்றும்
அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது எளிது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணயச் சபையின் ஆதரவைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள், உத்தேச சீர்திருத்தங்கள் மற்றும் வரித் திருத்தங்கள் என்பன அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இதுபோன்ற விஷயங்களில் அக்கறை காட்டுவது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர், விமர்சிப்பவர்கள் மாற்று வழிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.