அமைச்சரவையில் உடனடியான மாற்றங்களை செய்யாதிருக்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவையில் உடனடி மாற்றங்கள் வரப்போவதாக இன்றையதினம் ஊடகங்கள் சிலவற்றில் வெளியான தகவல்கள் தொடர்பில், மூத்த அமைச்சர்கள் சிலர் ரணிலிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே ரணிலின் இந்த தீர்மானம் வெளிப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
புதிய அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் ,பொதுஜன பெரமுன தரப்புக்கும் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமையே இந்த தாமதத்திற்கான காரணமென தெரியவருகிறது.