கோடீஸ்வரர்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தனது கணவருடன் கதிர்காமம் ஆலயத்துக்கு ஹெலிகொப்டர்களில் பல தடவைகள் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சந்தேக நபரான திலினி பிரியமாலி கோடீஸ்வரர்களை ஏமாற்றி பெற்ற கோடிக்கணக்கான ரூபா பணத்தை ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த சில நபர்களின் உதவியுடன் சாக்கு மூட்டையாக கொண்டு சென்றமை கூறப்படுவது தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பிக்கபட்டுள்ளன.
இந்த நிலையில், அவரது நிறுவனம் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் பாதுகாப்பு சிசிரிவி கமெராக்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆராய தீர்மானித்துள்ளது.