60,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பலொன்று இலங்கைக்கு நேற்று வந்தடைந்ததாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கப்பலிலிருந்து எண்ணெய் இறக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகும் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மசகு எண்ணெய் தாங்கிய மேலும் 5 கப்பல்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் மின்சக்தி, வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.