சந்தேகத்துக்கிடமான கப்பல்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 6 கடற்படை வீரர்களுடன் காணாமல்போன கடற்படை கப்பல் தெற்கு கடற்கரையின் சர்வதேச கடற்பரப்பில் இருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் இருப்பதாக இன்று (18) காலை கடற்படையின் மற்றுமொரு கப்பலுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில் மேற்படி கப்பலை நோக்கி மற்றொரு கப்பல் சென்று கொண்டிருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இயந்திரக் கோளாறு காரணமாக கப்பல் சர்வதேச கடற்பரப்பை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூ அவர் கூறினார்.
ஆறு பேரைக் கொண்ட இந்தக் கடற்படைக் குழுவினர் (16ஆம் திகதி) தென் கடற்பரப்புக்குச் சென்றிருந்த நிலையில், (17ஆம் திகதி) தொடர்பாடல் துண்டிக்கப்பட்டமையினால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.