தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் 178 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களில் 6 பேரே பங்கேற்றனர்.
வாக்கெடுப்பில் கலந்துகொண்ட சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் ஆகியோர் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இரா. சாணக்கியன் எம்.பி. வெளிநாடு சென்ற காரணத்தால் இன்று சபைக்கு வரவில்லை.
அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எஸ்.வினோநோகராதலிங்கம் எம்.பியும் சுகயீனம் காரணமாக இன்று சபைக்கு வரவில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரு எம்.பிக்களும் 22 இற்கு ஆதரவு வழங்கினர்.